என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்
- வேலூரில் வருகிற 10-ந்தேதி
- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுரை
வேலூர்:
பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் மாதத்தின் 2-வது சனிக்கிழமை தோறும் குறைதீர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கும் மனு செய்தால் செல்போன் எண் பதிவு செய்தல் குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் செய்தல் உள்ளிட்டவர்கள் மேற்கொள்ள மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி வரும் சனிக்கிழமை வேலூர் தாலுகாவில் கணியம்பாடி அடுத்த கம்ம சமுத்திரம், அணைக்கட்டு தாலுகாவில் பள்ளிகொண்டா அடுத்த சத்தியமங்கலம், காட்பாடி தாலுகாவில் வண்டறந்தாங்கல், குடியாத்தம் தாலுகாவில் கருணீக சமுத்திரம், கே.வி. குப்பம் தாலுகாவில் அங்கராங்குப்பம், பேரணாம்பட்டு தாலுகாவில் அறவட்லா ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
எனவே பொதுமக்கள் சிறப்பு குறைவு தீர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் அரசு வகுத்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் அணிதல் சமூக இடைவெளி கடைபிடித்தால் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தால் உள்ளிட்டவர்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்ப ட்டுள்ளது.






