search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

    குறைதீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • எந்தவித கடன் வசதியும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு

    குடியாத்தம்:

    குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் தாலு காக்களைச் சேர்ந்த விவசாயி களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டம் துவங்கிய உடன் கடந்தமாதம் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பேசிய விவசாயி பழனிவேலன் வளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கடன் விவசாயிகள் மீது சிலர் போலியாக கடன் பெற்றனர் இது குறித்து வழக்கு நடைபெற்று மோசடிக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனாலும் அந்த 87 விவசாயிகளுக்கு எந்தவித கடன் வசதி கிடைக்கவில்லை.

    விவசாயி சேகர் குடியாத்தம் உழவர்சந்தை அருகே உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.அப்போது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

    இந்தக் கூட்டத்தில் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முக்கியமான துறைகளின் அதிகாரிகள் வருவதில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்.விவசாயிகள் வைத்த குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றார்.

    Next Story
    ×