search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒற்றை கொம்பன் யானை அட்டகாசம்
    X

    விவசாய நிலத்தில் சுற்றி திரியும் ஒற்றை கொம்பன் யானையை படத்தில் காணலாம்.


    ஒற்றை கொம்பன் யானை அட்டகாசம்

    • கிராம மக்கள் அச்சம்; விடிய விடிய ரோந்து
    • துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள ஆசனாம்பட்டு வனப்ப குதியில் ஒற்றை யானை புகுந்தது.

    ஒடுகத்தூர் வனச்சர கத்திற்கு உட்பட்ட ஆசனாம்பட்டு, கல்லாபாறை, குறவன் கொட்டாய், தென்புதூர், மேல்பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்ச லுக்கு ஓட்டி சென்றனர்.

    அப்போது ஒற்றை கொம்பன் யானை சுற்றி திரிவதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது.

    இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரின் ஆங்காங்கே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது விவசாய நிலங்களில் ஒற்றை கொம்பன் யானை சுற்றி வலம் வருவதால் நேற்று இரவு முதல் வனத்துறையினரின் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். யானையின் நடமாட்டத்தால் ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வயது முதிர்ந்து காணப்படும் இந்த யானையை யாரும் இடையூறு செய்யக்கூடாது. இது பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது.

    விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தினால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

    ஜவ்வாது மலை தொடரை பூர்வீகமாக கொண்டு ஜமுனாமுத்தூர், ஆலங்காயம், ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலேயே வாழ்ந்து வருகிறது.

    அந்த யானையை பொதுமக்கள் தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும். வேட்டைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரேனும் யானையே துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×