என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள்
    X

    சாலை அமைக்கும் பணிகளை அமலுவிஜயன் எம்எல்ஏ தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள்

    • இருபுறமும் சுமார் 3 அடிகள் அகலப்படுத்த முடிவு
    • அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்து அக்ராவரம் ஊராட்சி ரேணுகாபுரம் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.

    2022-2023 திட்டத்தின் கீழ் சுமார் 5.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.6 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் சுமார் 3 அடிகள் அகலப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரும்பாடி விஸ்வநாதன், மூங்கப்பட்டு குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் அமலுவிஜயன் எம.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×