என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் சுற்றுப் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
- ரோந்து பணியின்போது சிக்கினர்
- சிறையில் அடைப்பு
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனை யடுத்து வேப்பங்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர்கள் இன்பரசன், விஜயகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மேல்அரசம்பட்டு ஆற்று ஓடையில் சாராயம் விற்பனை செய்து வந்த சீனிவாசன் (வயது49) என்பவரையும், அதே போல் அகரம் கிராமத்தில் வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம் (35) என்பவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






