search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்கறி விலை கடும் உயர்வு- வெண்டைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனை
    X

    காய்கறி விலை கடும் உயர்வு- வெண்டைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனை

    • கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைந்து இருந்ததால் விலை அதிகரித்து இருந்தன.
    • இன்று 550 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று 550 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைந்து இருந்ததால் விலை அதிகரித்து இருந்தன. வெண்டைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதே போல் இன்று மொத்த விற்பனை கடைகளில் உஜாலா கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.110-க்கும் விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.100 வரையும் உஜாலா கத்தரிக்காய் ரூ.70 வரையும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    தக்காளி-ரூ.20, நாசிக் வெங்காயம்-ரூ.22, சின்ன வெங்காயம்-ரூ.80, உருளைக்கிழங்கு-ரூ.17, கோலார் உருளைக்கிழங்கு-ரூ.32, உஜாலா கத்தரிக்காய்-ரூ.50, வரி கத்தரிக்காய்-ரூ.35, அவரைக்காய்-ரூ.50, பீன்ஸ்-ரூ. 35, வெள்ளரிக்காய்-ரூ.15, குடை மிளகாய்-ரூ.40, ஊட்டி கேரட் ரூ. 40, பீட்ரூட்-ரூ.20, முட்டைகோஸ்-ரூ.7, முள்ளங்கி -ரூ.12, புடலங்காய்-ரூ.30, பட்டை கொத்தவரங்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.10, பன்னீர் பாகற்காய்-ரூ.30, சவ்சவ்-ரூ.7, காலி பிளவர் ஒன்று-ரூ.20.

    Next Story
    ×