என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருசாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்
ஆத்தூர் செல்வ விநாயகர் கோவில் வருசாபிஷேகம்
- கலசத்திலிருந்து புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருசாபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆத்தூர்:
ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் கோவிலின் சந்திரபுஷ்கரணி தீர்த்த கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கலசத்திலிருந்து புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story






