search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
    X

    முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கிய காட்சி. அருகில் துணை மேயர் சாரதாதேவி உள்ளார்.

    வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

    • கோட்டம் எண் 9-க்குட்பட்ட வாய்க்கால் பட்டரை ஜெய் மெட்ரிக் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆணையாளர் (பொ) ரவி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • முகாமில் கருவுற்ற 7 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 9-க்குட்பட்ட வாய்க்கால் பட்டரை ஜெய் மெட்ரிக் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆணையாளர் (பொ) ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. முகாமினை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    முகாமில் கருவுற்ற 7 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமிற்கு வந்த பொதுமக்களின் வருகை பதிவு செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய், டெங்கு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இம்முகாமில் சிகிச்சைகளுக்கு தேவையான மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு வருகை தந்த அனைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் மாநகர நல அலுவலர் யோகானந், மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், சாந்தி, இந்துஜா, சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×