என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள்- அதிகாரி ஆய்வு
    X

    மைதானத்தில் நடந்து வரும் பணிகளை அரசின் முதன்மை செயலாளர் அபூர்வா ஆய்வு செய்தார்.

    அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள்- அதிகாரி ஆய்வு

    • வாலிபால் மைதானம், மின்னொளி விளக்கு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.
    • பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பதை கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள அன்னை சத்தியா விளையாட்டு மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் ஸ்கேட்டிங் மைதானம், வாலிபால் மைதானம், நடைப்பயிற்சி மேற்கொள்ள பாதை, மின்னொளி விளக்கு, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அரசின் முதன்மை செயலாளர் அபூர்வா இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.

    பணிகளை விரை வாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×