என் மலர்
உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)
பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பால் 62 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பருவமழை கைகொடுத்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்டியது.
- ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பருவமழை கைகொடுத்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்டியது.
அதனைதொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 62.80 அடியாக சரிந்துள்ளது. 628 கனஅடிநீர் வருகிறது. 2569 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.70 அடியாக உள்ளது. 123 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 50 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.40 அடியாக உள்ளது. 20 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.






