search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட போதும் 70 அடிக்கு மேல் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
    X

    வைகை அணை (கோப்பு படம்)

    பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட போதும் 70 அடிக்கு மேல் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்

    • மேற்குதொடர்ச்சி மலை, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு 71 அடிவரை தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.

    கூடலூர்:

    பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணை அதன் முழுகொள்ளளவை எட்டியது. 71 அடி உயரம் கொண்ட அணையில் 70 அடிக்கும் ேமல் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    முல்லைபெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், மேற்குதொடர்ச்சி மலை, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு 71 அடிவரை தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி அணையை கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை,திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் 70.57 அடியில் நீடித்து வருகிது. அணைக்கு 2426கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் 3 மாவட்ட பாசனத்திற்காக 2091 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137.85 அடியாக உள்ளது. 2869 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணை 55 அடியிலேயே நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 363 கனஅடிநீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 24 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 29.4, தேக்கடி 15, உத்தமபாளையம் 1 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×