search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ரெயில் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தல்!
    X
    கோப்புப்படம்.

    தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ரெயில் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தல்!

    • கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ஆக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் இருந்த நிலையில் அகல ரயில் பாதையாக மாற்றிய பின் அந்த ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.
    • தேனி மாவட்ட மக்கள் மதுரைக்கு செல்லவும், மீண்டும் மதுரையில் இருந்து தேனிக்கு வருவதற்கு ஏதுவாக ரயில் புதிதாக இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை.

    தேனி:

    தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் ராஜன் மத்திய ரயில்வே துறைக்கும், சென்னையில் உள்ள ரயில்வே டிவிஷனல் மேலாளருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, மதுரை-போடி ரயில் பாதையில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ஆக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் இருந்தது. தற்போது அகல ரயில் பாதையாக மாற்றிய பின் அந்த ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.

    இதனால் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஐ.டி.ஐ மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தேனி புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் பலர் பாதிப்பு அடைகிறார்கள். மேலும் தற்போது உள்ள ரயில் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் வரவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் மற்ற அலுவலகங்களுக்கு வரவும் கூடுதல் நேரமாகிறது. அதுபோல ஆட்டோ கட்டணமும் கூடுதலாக செலவாகிறது.

    எனவே மீண்டும் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். அங்கு ரயில் டிக்கெட் புக்கிங் அலுவலகமும் திறக்க வேண்டும். மேலும் தற்போது மதுரை-போடி இடையேயான முன்பதிவு இல்லாத பேசஞ்சர் ரயில் மதுரையில் இருந்து வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆனால் தேனி மாவட்ட மக்கள் பல்வேறு வேலைகளுக்காக மதுரைக்கு செல்லவும், மீண்டும் மதுரையில் இருந்து தேனிக்கு வருவதற்கு ஏதுவாக காலையில் போடியில் இருந்து 7.30 மணிக்கும், மாலையில் மதுரையில் இருந்து போடிக்கு வருவதற்கு 6 மணிக்கும் பேசஞ்சர் ரயில் புதிதாக இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    Next Story
    ×