என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள   நல்லம்பள்ளி-பொம்மிடி சாலை சீரமைக்கப்படுமா?  -பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை
    X

    முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில்.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லம்பள்ளி-பொம்மிடி சாலை சீரமைக்கப்படுமா? -பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை

    • நல்லம்பள்ளி-பொம்மிடி இடையே உள்ள சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
    • வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர் இந்த சாலையை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி-பொம்மிடி இடையே உள்ள சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை மூலம் தருமபுரி நகருக்கு வரும் வாகனங்கள் சுமார் 25 முதல் 30 கிலோமீட்டர் வரை பயணிக்கும் தூரம் குறையும்.

    மேலும் இந்த சாலை வழியாகத்தான் முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் வருகின்றனர்.

    ஆனால் தற்போது இந்த சாலை அபாயகர மான நிலையில் சிதிலமடைந்துள்ளது.வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர் இந்த சாலையை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

    நல்லம்பள்ளி மற்றும் பொம்மிடி,முத்தம்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கை தற்போது தருமபுரி டி.ஆர்.டி.ஏ. அலுவலர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

    அவர்கள் இது குறித்து கூறுகையில் நல்லம்பள்ளி-பொம்மிடி சாலையை சீரமைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மூலமாக வனத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாலை சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×