search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நட்டாத்தி பஞ்சாயத்தில்  காசநோய் பரிசோதனை முகாம்
    X

    முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    நட்டாத்தி பஞ்சாயத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

    • சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது.
    • சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது. துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சின்ன நட்டாத்தி ஆகிய ஊர்களில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆம்புலன்ஸ் அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கொம்புகாரன் பொட்டல் வார்டு உறுப்பினர் பண்டாரம், நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்துராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன்,ஏரல் ஆய்வக மேற்பார்வையாளர்சுரேஷ், சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை, நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி, நுண் கதிர் வீச்சாளர்கள் சுரேஷ்,மாலதி, நுண்கதிர் உதவியாளர் எட்டையா, சுகாதார தன்னார்வலர்கள், மஸ்தூர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி செய்து இருந்தார்.

    Next Story
    ×