என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெங்களூருவிலிருந்து சிவகாசிக்கு கடத்த முயன்ற  ரூ.2.15 லட்சம் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்
    X

    பெங்களூருவிலிருந்து சிவகாசிக்கு கடத்த முயன்ற ரூ.2.15 லட்சம் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்

    • மினி வேனில் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் 342 கிலோ இருந்தது.
    • ரூ.2.15 லட்சம் மதிப்பிலான அந்த பொருட்களை ,ரூ.7 லட்சம் மதிப்பிலான மினி வேனுடன் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் அழகுப்பாடி என்ற இடத்தருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.அந்த மினி வேனில் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் 342 கிலோ இருந்தது.

    ரூ.2.15 லட்சம் மதிப்பிலான அந்த பொருட்களை ,ரூ.7 லட்சம் மதிப்பிலான மினி வேனுடன் பறிமுதல் செய்தனர்.

    பெங்களூருவிலிருந்து சிவகாசிக்கு புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த டிரைவர் முத்து (வயது 28) என்பவரை கைது செய்தனர். பெரியசாமி என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×