search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
    X

    நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்

    • நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
    • இந்த மாதம் இறுதியில் டெண்டர் விடப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பஞ்சப்பூரில் ஏற்கனவே அமைந்துள்ள டபிள்யூ.எஸ்.பி. மாடல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு 58 எம்.எல்.டி. அளவுக்கு கழிவு நீரை சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 3 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கல்கண்டார் கோட்டை மற்றும் பஞ்சகரையில் புதிய மொத்தம் 40 எம்.எல்.டி. அளவுக்கு 2 சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பஞ்சப்பூரில் ஏற்கனவே இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு மாற்றாக 100 எம்.எல்.டி. அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ரூ. 200 கோடியில் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்துக்கான ரூ.200 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் தெரிவித்தார்.இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, ஏற்கனவே பஞ்சப்பூரில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக இனிமேல் புதிதாக அமைக்கப்பட இருக்கும் நவீன சுத்திகரிப்பு மையத்துக்கு 10 ஏக்கர் இடம் போதும்.ஸ்ரீரங்கம் மண்டலம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து மண்டலங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீரை இங்கு சுத்திகரிக்க முடியும். இந்த மாத இறுதிக்குள் அதற்கான டெண்டர் விடப்பட்டு அடுத்த மாத தொடக்கத்தில் திட்ட பணிகள் தொடங்கும் என்றார்.

    Next Story
    ×