என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
    X

    மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

    • திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
    • திருச்சி மாநகரை பொருத்தமட்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    திருச்சி,

    சமீபத்தில் பெய்த மழையால் கொசுக்கடி மூலம் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மனச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது.இதனால் மேற்கண்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக திருச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி கூறும் போது,

    திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் 500 சுகாதார பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    டெங்கு காய்ச்சலை குறைக்க பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் கொசு தொல்லை இல்லாமல் வைத்திருந்தால் டெங்குவை ஒழிப்பது எளிதானது என்றார்.

    திருச்சி மாநகரை பொருத்தமட்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகு மார் என்பவரது மனைவி கனகவல்லி ( வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இ ல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×