என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
- ரகுமான், கோகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
- அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் ரகுமான் (எ)சக்தி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .
இவர் கோகிலா (வயது 22) என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சாய் சஷ்டிகா என்ற ஒரு பெண் குழந்தையும், சாய் சர்வேஸ் என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கோகிலா தூக்கிட்டு உள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார். உடனடியாக பாலமுருகன் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கு மருத்துவர்கள் பரி சோதனை செய்த போது கோகிலா ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கோகிலாவுக்கு திருமண மாகி 2 1/2 ஆண்டு களே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை மேற்கொண்டு உள்ளார்






