என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் ரூ. 9 லட்சம் ஆன்லைன் மோசடி
    X

    பெண்ணிடம் ரூ. 9 லட்சம் ஆன்லைன் மோசடி

    • ஆன்லைன் மோசடியில் பெண் ரூ.9 லட்சத்தை இழந்தார்
    • அதிர்ஷ்டம் அடித்ததாக நம்ப வைத்து

    திருச்சி:

    திருச்சி தென்னூர் ஓதமினார் மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் அகமது ஷெரீப். இவரது மகள் அனிஷா அமல். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் கோன் பனேகா குரோர்பதி நிறுவனத்திலிருந்து பேசுகிறோம்.

    உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ. 35 லட்சம் மற்றும் பி எம் டபிள்யூ கார் பரிசாக விழுந்துள்ளது. அதனை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு ரூ. 9 லட்சத்து 39 ஆயிரத்து 500 பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அனுஷா அம்மாள் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்குக்கு ரூ. 9 லட்சத்து 39,500 செலுத்தியுள்ளார்.

    ஆனால் பல மாதங்கள் ஆன பின்னரும் பரிசுத்தொகை அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனுஷா அமல் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிந்துமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×