search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ளஒலிம்பிக் அகடமிக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம்மாநகராட்சியிடம் விளையாட்டு துறை கேட்கிறது
    X

    திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ளஒலிம்பிக் அகடமிக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம்மாநகராட்சியிடம் விளையாட்டு துறை கேட்கிறது

    • திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ளது
    • ஒலிம்பிக் அகடமிக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம்
    • மாநகராட்சியிடம் விளையாட்டு துறை கேட்கிறது


    திருச்சி


    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022 டிசம்பர் 29ம் தேதி திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திருச்சியில் ஒரு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.


    அந்த ஒலிம்பிக் அகாடமி திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அருகாமையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


    இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 574 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இந்த அகாடமிக்கு 30 ஏக்கர் நிலம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.


    இந்த நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளதால் மேலும் 20 ஏக்கர் நிலம் அதே பகுதியில் ஒலிம்பிக் அகாடமிக்கு ஒதுக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டு கொண்டுள்ளது.


    இதற்காக புதிய முன்மொழிவை அனுப்ப உள்ளனர்.


    ஒலிம்பிக்கில் பாஸ்கெட் பால், வாலிபால், சைக்கிளிங், ஆக்கி, ஃபுட்பால்,டென்னிஸ் ஸ்விம்மிங் என மொத்தம் 168 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. ஆகவே அனைத்து விளையாட்டுகளையும் நடத்துவதற்கு விசாலமான இடவசதி மற்றும் கட்டமைப்புகள் தேவைப்படுகிறது.


    இதற்கிடையே அந்த பகுதியில் நவீன கிரிக்கெட் பயிற்சி மைதானம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறும் போது,


    ஒலிம்பிக் அகாடமிக்கு 30 ஏக்கர் போதுமானதாக இருக்காது. ஆகவே மேலும் 20 ஏக்கர் நிலம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டிருக்கிறோம். இதனை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலிக்கும் என நம்புகிறோம் என்றார்.




    Next Story
    ×