search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ண ஓவியங்களால் மிளிரும் திருச்சி மாநகராட்சி
    X

    வண்ண ஓவியங்களால் மிளிரும் திருச்சி மாநகராட்சி

    • திருச்சி மாநகராட்சி வண்ண ஓவியங்களால் மிளிருகிறது.
    • கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து

    திருச்சி:திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும், கனவு திட்டமாகவும் இருந்த ஒருங்கிணைந்த பஸ் நிலைய திட்டம் நனவாகி உள்ளது. திருச்சியை அடுத்த மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் பிரமாண்ட பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடிக்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள், 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய புதிய பைப் லைன் பொருத்தம் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மாநகரை அழகுப்படுத்தும் விதமாக பொதுச் சுவர்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், மேம்பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் என காணும் இடங்களில் எல்லாம் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டு முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில் இதுபோன்ற அழகுபடுத்தும் பணிகளுக்கு பணத்தை வாரி இறைக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இருப்பினும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அழகுப்படுத்தும் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதனிடம் கேட்டபோது, திருச்சி மாநகராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓவியம் தீட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அழகு படுத்துவதற்காக மட்டும் கிடையாது.பொதுச் சுவர்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிந்து கால்வாய்களை அடைத்துக் கொள்கிறது. இதற்கு நல்ல விடிவு தற்போது பிறந்துள்ளது. தேவையில்லாமல் கண்ட கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதும் இதன் மூலம் தடுக்கப்படும். தற்போது சுவரொட்டிகளுக்கு என ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மட்டுமே சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும்.அழகுபடுத்தும் பணியில் லைட்டிங் போன்ற சில பணிகளை மட்டுமே மாநகராட்சி செலவில் மேற்கொள்கிறோம். வர்ணம் தீட்டும் செலவினை நன்கொடையாளர்களே தருகிறார்கள் என்றார்.

    Next Story
    ×