என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 கிராமங்களில் பெரும்பாலான சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம்
    X

    8 கிராமங்களில் பெரும்பாலான சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம்

    • 8 கிராமங்களில் பெரும்பாலான சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என கடிதம் எழுதப்பட்டுள்ளது
    • வாரியக் கடிதத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு துறையை சேர்ந்த 12 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ஏ.பி.ரபியுல்லா கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதம் தற்போதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில்,

    திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பங்குளம், பெரியநாயகி சத்திரம், மண்ணச்சநல்லூர், திருச்செந்துறை, சித்தாநத்தம், கோமாகுடி, மணமேடு, பாகனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை. வக்பு வாரியத்தின் தடையின்னை சான்று பெறாமல், இங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, மடமானம் வைக்கவோ பத்திரப்பதிவு துறை அனுமதிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதே போன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு, தென்னூர், கிழக்குறிச்சி, அபிஷேகபுரம், குவளக்குடி, திருமலை சமுத்திரம் (ஓலையூர்), கும்பக்குடி, அரசங்குடி, செங்குளம், சோமரசம் பேட்டை, சிக்கத்தம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பகுதியாக சில சர்வே எணகளில் உள்ள நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்தக் கடிதத்தில் குறிப்பிட பட்டுள்ள சர்வே எண்களுக ்குட்பட்ட நிலங்களை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ, பரிமாற்றம் செய்யவோ இயலாத நிலைக்கு நில உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், ஒரு கிராமத்தில் ஓரிரு சர்வே எண்கள் வேண்டுமானால், வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக இருக்கலாம்.ஆனால் முழு கிராமமே எப்படி வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

    இது குறித்து வக்பு வாரிய அதிகாரிகள் கூறும்போது, முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த ராணிமங்கம்மாள், பாண்டியமன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் இந்த நிலங்களை முஸ்லிம்களுக்கு இனாமாக த ந்துள்ளனர். அதற்குரிய செப்புப்பட்டயங்கள் உள்ளன.

    இது குறித்து 1954-ம் ஆண்டில் இந்திய அரசு அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள வக்பு வாரியத்துக்குரிய நிலங்களின் பட்டியல் தான் பதிவுத்துறைக்கு னுப்பப்பட்டுள்ளது. வக்பு வாரிய சொத்துகளை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இதேபோன்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×