search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்   - கால்நடை பராமரிப்பு சங்கத்தினர் வலியுறுத்தல்
    X

    பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - கால்நடை பராமரிப்பு சங்கத்தினர் வலியுறுத்தல்

    • கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி முழு பண பயனும் கிடைக்கும் விதத்தில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    திருச்சி,

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பெரியசாமி வரவேற்றார். மாநில இணை செயலாளர் மனோகரன் அஞ்சலி தீர்மானங்கள் வாசித்தார்.

    அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க முன்னாள் மாநில பொருளார் சிவக்குமார், முன்னாள் மாநில இணைசெயலளார் ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆண்டறிக்கை வாசித்து சிறப்புரையாற்றினார்.

    மாநில இணை செயலர் ராஜசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அமுதா மற்றும் சக்திவேல் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். நிறைவாக மாநில துனைத் தலைவர் மணிராஜ் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி 3 தவணைகளையும் ரொக்கமாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி முழு பண பயனும் கிடைக்கும் விதத்தில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் பணியாற்றிய கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை முன் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். சி. பிரிவு ஊழியர்களான கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை எங்கள் பதவிகள் அல்லாத இடங்களில் மாற்றுப் பணிக்கு அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×