search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்
    X

    அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்

    • திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கைதி திடீரென்று தப்பி ஓடினார்
    • திருப்பூர் பகுதியில் தீபன்ராஜ் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அங்கு சென்ற தனிப்படையினர் கைது செய்தனர்

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் குற்றவாளிகள் நன்னடத்ததையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விளையாட்டு, விவசாயம், மீன் வளர்ப்பது உள்ளிட்ட வேலைகளை சிறை அதிகாரிகள் கொடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 2021-ம்ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த தீபன்ராஜ் (வயது 31) என்பவர், சிறுமியை கற்பழித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் விசாரனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

    பின்னர் புதுக்கோட்டை கலெக்டரின் உத்தரவின் பேரில் தீபன்ராஜ் மீது 3 வழக்குகள் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவரும் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார்.

    இதையடுத்து கடந்த 9-ந்தேதி தனக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படியும் சிறை அதிகாரிகளிடம் நடித்துள்ளார்.

    இதை நம்பிய சிறை அதிகாரிகள் சிறை காவலர்கள் பாதுகாப்போடு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீபன்ராஜை அழைத்து வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய தீபன்ராஜ் நேற்று (20-ந்தேதி) அதிகாலை 1 மணியளவில் சிறை காவலர்கள் அசந்த நேரத்தில் நைசாக மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இதையறிந்த சிறை காவல்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் அடிப்படையில் சிறை அதிகாரிகள் உடனடியாக தனிப்படை அமைத்து தப்பி சென்ற விசாரனை கைதியை தேடி வந்தனர். விசாரனையில் திருப்பூர் பகுதியில் தீபன்ராஜ் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    பின்னர் சிைற தனிப்படை போலீசார் திருப்பூருக்கு விரைந்து அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி தீபன்ராஜை பிடித்து வந்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் சிங்கம் பட சினிமா பானியில் அடைத்தனர். கைதி தப்பி சென்ற 24 மணி நேரத்தில் பிடித்த சிறை போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×