search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்-கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
    X

    தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்-கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

    • தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்
    • ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார். சீலைப் பிள்ளையார்புத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சின்னப் பள்ளிபாளையம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையலறை, உன்னியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.93 லட்சத்தில் கட்டுப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

    இதேபோல் சீத்தப்பட்டி ஊராட்சி 14-வது மானிய நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் வி.எஸ் நகரில் அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலைப் பணி, கிடாரம் ஊராட்சி 14-வது மானியத் திட்டத்தின் கீழ் ரூ.15.40 லட்சம் மதிப்பீட்டில் சூரம்பட்டி பிரிவு ரோடு முதல் நாமக்கல் மாவட்ட எல்லை வரை அமைக்கப்படும் தார்சாலைப் பணி மற்றும் வாள்வேல்புத்தூரில் குளம் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

    பின்பு நத்தம் அரசினர் பிற்பட்டோர் நலப்பள்ளி மாணவிகள் விடுதியின் அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்கள் தரம், இருப்பு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எம்.களத்தூர் ஊராட்சி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.9.75 லட்சத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு சேர்வைக்காரன் பட்டி கிராமத்தில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் பணியை ஆய்வு செய்தார்.

    ஸ்ரீராமசமுத்திரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணூயீர் பாசனத்தின் மூலம் வாழை சாகுபடி செய்யும் பணியை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சரவணகுமார், உதவி பொறியாளர் கலைராஜ் மற்றும் அந்தந்த பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×