என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மாணவர் தூக்கிட்டு தற்கொலை

- துறையூர் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 51). இவர் அதே பகுதியில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சத்யா (45) என்ற மனைவியும், லிங்கேஸ்வரர் (20) என்ற மகனும் உள்ளனர். இதில் லிங்கேஸ்வரர் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள மாடி பகுதிக்கு தூங்க சென்ற லிங்கேஸ்வரர் காலை வெகுநேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த சண்முகம் மேலே சென்று பார்த்துள்ளார்.அப்போது லிங்கேஸ்வரர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் லிங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ேபாலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.படிப்பு கடினமாக இருந்ததால் லிங்கேஸ்வரர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கல்லூரியில் ராக்கிங் ஏதேனும் நடைபெற்றதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.