search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்
    X

    கன மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்

    • உப்பிலியபுரம் பகுதியில் விட்டு விட்டு வெளுத்து வாங்கியது
    • கன மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தது

    திருச்சி:

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.அதன்படி நேற்று பிற்பகல் முதல் பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு விடிய, விடிய பாட்டம் பாட்டமாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் காற்றுடன் மழை கொட்டியது.இதில் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இந்த பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் சம்பா பயிரிட்டுள்ளனர். அதிலும் பணப்பயிராக கருதப்படும் சீரக சம்பா நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.இதுவே உப்பிலியபுரம் பகுதி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித்தரும் விவசாய பயிராகும். நெற்பயிர்கள் பூட்டு வாங்கியுள்ள நிலையில், மழை பெய்ததால் அவை அனைத்தும் சாய்ந்துள்ளதாக தெரிவித்த தங்கநகர் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், இந்த ஆண்டு நெல் மகசூல் கேள்விக்குரியதாகி உள்ளது என்றார்.


    Next Story
    ×