என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமயபுரத்தை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
- திருச்சி மாவட்டத்தில் அதிக வருவாய் தரும் பகுதியாக உள்ளதால் வலியுறுத்தல்
- முதல்வர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கோரிக்கை மனு
திருச்சி,
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோயிலுக்கு வருடம் முழுவதும் தமி ழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் இருந்த ஏராள மான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இந்த சமயபுரமானது திருச்சி மாவட்டம், மண்ண ச்சநல்லூர் தாலுகா, எஸ்.கண்ண ணூர் பேரூராட்சியின் கீழ் அமைந்துள்ளது. பொது வாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைய பெற்ற ஊர்கள் தனி தாலுக்காவாக இருக்கும்.திண்டுக்கல் மாவட்ட த்தில் முருகன் கோயில் அமைய பெற்றபழனி, திருவள்ளூர் மாவட்டத்தி லுள்ள முருகன் கோவில் இருக்கும் திருத்தணி, மதுரை மாவட்டத்தில் முருகன் கோவில் உள்ள திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாலிங்கம் சுவாமி அமைந்துள்ள திருவிடை மருதூர், அதே தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐயாரப்பன் கோவில் உள்ள திருவையாறு, கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் புகழ்பெற்ற பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சேலம் மாவட்டத்தில் சங்ககிரி தாலுகா சங்ககிரி கோட்டை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் தாண்டேஸ்வரர்திருக்கோ வில் செந்துறை,கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்ச லம் சிதம்பரம் ஆகிய இடங்களில் ஆகிய வற்றை உதாரணமாக கூறலாம்.
ஆனால் இந்து அறநிலையத்துறைக்கு அதிகளவு வருமானத்தை அள்ளித்தரும் மாரியம்மன் கோயில் அமைந்துள்ள சமயபுரம் இன்னும் தாலுகா அந்தஸ்துக்கு உயர்த்தப்படவில்லை என்பது அப்பகுதி பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது.சமயபுரம் அருகே மண்ணச்சநல்லூர் தாலுகா வில் உள்ள இருங்களூர், கொணலை, சிறுகனூர், சணமங்கலம், வாழையூர், வெங்கங்குடி, சீதேவிமங்கலம், தெற்கு சீதேவி மங்கலம், வடக்கு ச கண்ணனூர், கி ச கண்ணனூர், மே.சமயபுரம், திருப்பட்டூர், ஆவாரவல்லி, கூத்தூர், ஆய்குடி, பெரகம்பி, எதுமலை, லால்குடி தாலுகாவில் உள்ள ஊட்டத்தூர், மாடக்குடி, மருதூர், வி.துறையூர், தச்சங்குறிச்சி, மகிழம்பாடி, குமுளூர், புஞ்சை சங்கேந்தி, வந்தலை கூடலூர், கண்ணாகுடி, ரெட்டி மாங்குடி, நெய்க்குப்பை, பெருவளப்பூர் ஆகிய கிராமங்களை ஒன்றிணைத்து சமயபுரத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைத்திட அப்பகுதியினர் கோரிக்கை விடுப்பதோடு, இதனை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அமைச்சர், முதல்வர் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.






