என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் சில்லென்ற காற்றுடன் மழை
- வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் திருச்சியில் சில்லென்ற காற்றுடன் மழை பெய்தது
- அதிகபட்சமாக மாநகரில் 34 மி.மீ. மழை அளவு பதிவானது
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலா மழை பெய்தது. அதிகபட்சமாக மழை அளவு பொன்னையாறு அணை பகுதியில் 40 மி.மீ. பதிவானது. திருச்சி ரயில்வே ஜங்ஷன், மாநகரத்தில் 34 மி.மீ., கோவில்பட்டியில் 30.2, பொன்மலையில் 28, சிறுகுடியில் 27.6, தென்பரநாடு 27, சமயபுரம் 23.4, மருங்காபுரி 22.4, துறையூர் 19, கல்லக்குடியில் 8.4 மி.மீ. என மழை அளவு பதிவாகி இருந்தது. குறைந்த பட்ச மழை அளவாக புலிவலத்தில் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. நேற்று இரவு திருச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 403.3 மி.மீ. ஆக பதிவாகி இருந்தது. சராசரியாக 16.8 மி.மீ. பதிவானது.திருச்சி மாநகரில் பெய்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் இருசக்கர வாகனங்கள் தத்தளித்தபடி சென்றனர். மழையை எதிர்பார்க்காத பொதுமக்கள் பலர் நனைந்தபடியே இரவு வீடு திரும்பினர். மேலப்புதூர் கீழ் பாலத்தில் தண்ணீர் அதிகளவு தேங்கியால் வாகனங்கள் மாற்று பாதையில் சென்றன. காற்று காலம் தொடங்கிவிட்டாலும், வெப்பத்தின் தாக்கம் திருச்சியில் குறையாமல் இருந்து வந்த நிலையில், குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது இதமாக இருந்தது.






