search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சத்தில் திட்டப்பணிகள்
    X

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சத்தில் திட்டப்பணிகள்

    • காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சம் செலவில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு நகர்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.43.70 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 2-ல், அத்தனூர் அம்மன் கோவில் தெரு வார்டு எண் 4-ல், ஆண்டாபுரம் ரோடு வார்டு எண் 1 மற்றும் வார்டு எண் 10, காமராஜர்த் தெரு மற்றும் வார்டு எண் 11-ல் பள்ளிவாசல் தெரு, 5-வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் தார் சாலை வலுப்படுத்துதல் பணிக்கும் தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் ஈரக் கழிவுகளை தீர்வு செய்வதற்கான செயலாக்க கட்டமைப்புப் பணி,முசிறி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் கூட்டுறவு வங்கி அருகில் நிழற்குடை அமைத்தல், அதே திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் காட்டுப்புத்தூர் வார்டு எண் 13-ல், வடக்கு முத்துராஜா தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.75.7 லட்சம் செலவில் மேற்கண்ட திட்ட பணிகள் செய்ய பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத் தலைவர் சுதாசிவ செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல்அமீது, ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், திருஞானம், காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.டி.எஸ்.செல்வராஜ், தொட்டியம் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணவேணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சிவசெல்வராஜ், வார்டு கவுன்சிலர்கள் சிவஜோதி, பானுமதி, பழனிவேல், அன்னபூரணி, கருணாகரன், மணிவேல், ராணி, விஜயா, இளஞ்சியம், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சிவசெல்வராஜ் சிறப்பாக செய்திருந்தார். தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், காட்டுப்புத்தூர் நகர தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள், பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

    Next Story
    ×