search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி  ஸ்ரீரங்கத்தில் சப்த பிரகார உற்சவம் நிகழ்ச்சி
    X

    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் சப்த பிரகார உற்சவம் நிகழ்ச்சி

    • ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்
    • இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது

    திருச்சி :ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆத்யயன உத்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிகழ்ச்சியே சப்த பிரகார பிரதட்சிணை நிகழ்ச்சி ஆகும். தற்போதைய நிகழ்வு 6-வது நிகழ்ச்சியாகும். ெரங்கநாத சுவாமி கோவிலின் சப்த பிரகாரத்தை சுற்றி வருவது ஒரு ஜீவாத்மாவை உயர்த்துவதாக கருதப்படுகிறது. திருவிழாவின் போது தினமும் அதிகாலையில் பக்தர்களின் இந்த பிரதட்சிணை நடைபெறும். இந்நிகழ்ச்சியானது இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை 7 நாட்கள் நடத்தப்படுகிறது.இதில் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். முதல் நாளான இன்று மாலை 5.30 மணிக்கு வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீமதி மைதிலி ஜெகந்நாதன், வயலின் வித்துவான் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன், மிருதங்க வித்துவான் ஸ்ரீ ரங்கராஜன், கடம் வித்துவான் ஸ்ரீ ரங்கநாதன் ஆகியோர் இசை அமைக்கிறார்கள்.இரண்டாம் நாளான நாளை (24-ந்தேதி, சனிக்கிழமை) மாலை வீணை வித்துவான் முடிகொண்டான் ஸ்ரீ ரமேஷ், மிருதங்க வித்துவான் ஸ்ரீ சேலம் சீனிவாசன், கடம் வித்துவான் ஸ்ரீ விஷ்ணுபுரம் ரகு ஆகியோர் இசை அமைக்கிறார்கள். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (25-ந்தேதி) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீமதி மாதங்கி சத்தியமூர்த்தி, வயலின் வித்துவான் குமாரி ஸ்ருதி ரஞ்சனி, மிருதங்க வித்துவான் ஸ்ரீ எஸ் விஜயராகவன், கஞ்சிரா வித்துவான் ஸ்ரீ சேகர் ஆகியோர் இசை அமைக்கிறார்கள்.நான்காம் நாளான 26-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீ மகேஷ் காஷ்யப், வயலின் வித்துவான் ஸ்ரீ ஆனந்த், மிருதங்க வித்துவான் ஸ்ரீ ஹரிபிரசாத், மோர்சிங் வித்துவான் கலைமாமணி தீன தயாளு ஆகியோர் இசை அமைக்கிறார்கள். ஐந்தாம் நாளான 27-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீ திருச்சி ரமேஷ், வயலின் வித்துவான் ஸ்ரீ என்.சி.மாதவ், மிருதங்க வித்துவான் ஸ்ரீ மதுசூதனன், கடம் வித்துவான் ஸ்ரீ ரவிகிருஷ்ணன் ஆகியோர் இசை கச்சேரி நடத்துகிறார்கள்.6-ம் நாளான 28-ந்தேதி (புதன்கிழமை) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீமதி ஷியாமளா ரங்கராஜன், வயலின் வித்துவான் ஸ்ரீ திருச்சி கோவிந்தராஜன், மிருதங்க வித்துவான் ஸ்ரீ பாலாஜி, கஞ்சிரா வித்துவான் ஸ்ரீ பரமசிவம் ஆகியோர் இசை அமைக்கிறார்கள். ஏழாம் நாளான 29-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீமதி வி.ஜெயஸ்ரீ, வயலின் வித்துவான் ஸ்ரீ ஆதித்ய சீனிவாசன், மிருதங்க வித்துவான் திருச்சி ஸ்ரீ பி சுவாமிநாதன், கஞ்சிரா வித்துவான் ஸ்ரீ கிரீஷ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இசை விருந்து அளிக்கிறார்கள்.நிகழ்ச்சி தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் டாக்டர். கே.சீனிவாசன் கூறுகையில், இருமுடி கட்டி விரதம் இருந்து அய்யப்பனை காண செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் ெரங்கநாதரை தினமும் வழிபட வருகிறார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தகோடிகள் ெரங்கநாதர் அருளுடன் இனிமையான இசையையும் கேட்டு மகிழ்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள், ரசிகர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×