என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூட்டை உடைத்து எண்ணை கடை, வீட்டில் கொள்ளை
- திருச்சியில் நள்ளிரவில் பூட்டை உடைத்து எண்ணெய் கடை மற்றும் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
- ஒரு அறைக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் ரூபாய் பணம், மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் 2000 ரூபாய் மதிப்புள்ளான வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் திருடப்பட்டது தெரிய வந்தது
திருச்சி:
திருச்சி புத்தூர் ஆபீஸ்சர்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீராம் (வயது 57). இவர் திருச்சி கண்டோன்மென்ட் பறவைகள் சாலையில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ந்தேதி இரவு வழக்கம் போல் கடையை போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றவர் மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த 29 ஆயிரத்து 475 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீராம் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் மலையப்பன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள தன்னுடைய மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் நேற்றைய தினம் வீடு திரும்பினார்
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மர்ம நபர் யாரோ உள்ளே நுழைந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஒரு அறைக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் ரூபாய் பணம், மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் 2000 ரூபாய் மதிப்புள்ளான வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் திருடப்பட்டது தெரிய வந்தது
இது குறித்து ராஜேந்திரன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.