search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துவரங்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
    X

    துவரங்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

    • துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 1936-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44.90 லட்சமும், நகை்கடனாக 279 நபர்களுக்கு ரூ.83.18 லட்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையினர் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் டாப்செட்கோ மற்றும் தாம்கோ லோன் மேளா, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துவரங்குறிச்சி பகுதியை சுற்றியுள்ள பொன்னம்பட்டி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நல்லூர், செவந்தாம்பட்டி, லெக்கநாயக்கன்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, தெத்தூர, செவல்பட்டி ஆகிய 9 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 1936-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மொத்தம் 5,884 உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பாக 2021-2022 ஆம் ஆண்டில் மட்டும் புதிய உறுப்பினர்களாக 1,219 பேர் சேர்ந்துள்ளனர். இந்த சங்கத்தின் மூலம் 1,210 நபர்களுக்கு புதிய கடனாக ரூ.420.50 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4.2022 முதல் 23.8.2022 வரை புதிய உறுப்பினர்கள் 294 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களில் 265 நபர்களுக்கு ரூ.13.25 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சங்கம் மூலம் பயிர்க்கடன் 169 நபர்களுக்கு ரூ.401.83 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4.2022 முதல் 23.8.2022 வரை 313 நபர்களுக்கு ரூ.252.53 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44.90 லட்சமும், நகை்கடனாக 279 நபர்களுக்கு ரூ.83.18 லட்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சங்கத்தில் இ-சேவை மையம் மூலம் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட அரசு சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

    இ-சேவை மையம் மூலம் 2021-2022 ஆம் ஆண்டில் 2,560 நபர்களுக்கு அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சங்க்ததில் இ-சேவை மையம் செலவு போக ரூ.1.54 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. 1.4.2022 முதல் 23.8.2022 வரை 1,750 அரசு சான்றிதழ் வழங்கியதன் மூலம் ரூ.1.05 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த சங்கத்தில் விவசாய, நகை பயிரீட்டு கடன், கறவை மாட்டு கடன், விவசாய முதலீட்டு மூலதன கடன் ஆகிய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் நடந்த உறுப்பினர் கல்விதிட்ட முகாமில் திருச்சி கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபிபுல்லா கலந்துகொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்கள் கடன் வாங்கி பயன்பெற ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மருங்காபுரி ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளரும், கள அலுவலருமான பிரேமலதா, சங்க எழுத்தர் மணிகண்டன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் ஹரிதாஸ், பிற்படுத்தப்பட்டோர் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக சங்க பணியாளர் என்.டி.ராமசாமி வரவேற்றார். முடிவில் துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அசோகன் நன்றி கூறினார். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×