என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழா
- அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருச்சி:
முசிறி திருச்சி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
நவராத்திரி ஏழாம் நாள் விழாவான நேற்று உண்ணாமலை அம்மன் உற்சவம் மலர் அலங்காரத்தில் லலிதாம்பிகை அம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி கமல் மற்றும் நிர்வாகிகள் மனோகரன் ரவிச்சந்திரன் காஞ்சனா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
Next Story