search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துச் கூறிய மருத்துவக் கல்லூரி மாணவிகள் - வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு
    X

    தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துச் கூறிய மருத்துவக் கல்லூரி மாணவிகள் - வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு

    • முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதையும் புகட்டக்கூடாது.
    • பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால விட ஒரு சத்தான, உன்னதமான உணவு எதுவும் கிடையாது.

    திருச்சி :

    பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால விட ஒரு சத்தான, உன்னதமான உணவு எதுவும் கிடையாது. முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதையும் புகட்டக்கூடாது. அத்துடன் தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு மிகவும் உகந்தது. மேலும் குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.

    இன்னும் பல்வேறு முக்கிய காரணங்களை கொண்டுள்ள தாய்ப்பால் தரும் விழிப்புணர்வை அதிகரிக்க, அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கவும் தமிழகத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வரும் நிலையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    திருச்சி உறையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மாணவிகள் வில்லுப்பாட்டு மூலமாக தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு மாநகர சுகாதார நல அலுவலர் (பொறுப்பு) ஷர்மிலி பிரிசில்லா கலாமணி தலைமை தாங்கினார். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து மிகுந்த பேரிச்சம்பழம், முந்திரிப் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தைகள் இருக்க தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×