என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மசாஜ் சென்டர் இளம் பெண் பலாத்காரம் - தீயணைப்பு வீரர் மீது வழக்கு
    X

    திருச்சி மசாஜ் சென்டர் இளம் பெண் பலாத்காரம் - தீயணைப்பு வீரர் மீது வழக்கு

    • மாரிமுத்து. கடந்த 2019 ம் ஆண்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றார்.
    • அங்கு பணியாற்றிய 29வயது பெண்ணை சந்தித்தார்.

    திருச்சி :

    திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் தீயணைப்பு துறை குடியிருப்பில் வசித்து வருபவர் தீயணைப்பு வீரர் மாரிமுத்து. இவர் கடந்த 2019 ம் ஆண்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியாற்றிய 29வயது பெண்ணை சந்தித்தார். பின்னர் அவரை காதலிப்பதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் தங்கியிருக்கும் தீயணைப்பு துறை குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். பின்னர் கருக்கலைப்பிற்கான மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டது. அதன்பின் தீயணைப்பு படை வீரர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

    இது குறித்து அந்தப் பெண் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×