என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே சொகுசு வேன் கவிழ்ந்தது-பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் படுகாயம்
- அப்போது எதிர்பாராத விதமாக பஸ் ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது.
- இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டனர்.
ராம்ஜிநகர்
செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு உறவினர் வீட்டு புதுமனை புகு விழாவிற்கு சொகுசு வேனில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் சென்றனர். வேன் திருச்சி மதுரை சாலை மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பச்சை திருப்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ் ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் இடுப்பாடுகளின் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த அனைவரும் கூச்சலிட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேன் கவிழ்ந்ததால் திருச்சி மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த வேன் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரானது. வேன் கவிழ்ந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






