search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுகாதார ஆய்வாளர் வீட்டில்  நகைகள் கொள்ளை
    X

    சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகைகள் கொள்ளை

    • திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது
    • எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. (வயது 50). சுகாதார ஆய்வாளர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். பின்னர் வந்து வீட்டை திறந்து பார்க்கும் போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்த போது 4 பவுன் செயின், இரண்டு பவுன் வளையல். 12 கிராம் தங்க மோதிரம் மற்றும் நாணயங்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சுந்தரமூர்த்தி எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றார்.

    Next Story
    ×