search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
    X

    திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

    • திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    • அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசலை கடந்து வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார்

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா தொட்டியம் அருகே உள்ள அரசலூர் ஊராட்சி திருநாராயணபுரத்தில் அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள், அரையர்களால் பாடப்பட்ட இத்தளத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து, இரா பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று முக்கிய நாளான சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 5.04 மணியளவில் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. பக்தர்கள் ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, என பக்திப் பெருக்கோடு கோஷம் எழுப்பினர். அப்போது அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசலை கடந்து வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார். அப்போது பாசுரங்கள் பாடபட்டது. பின்னர் பெருமாள் தம்பதிர் சமேதமாக ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பத்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் ஹரிஹர சுப்ரமணியன், கோவில் செயல் அலுவலர் பிரபாகர், அறநிலையதுறை ஆய்வாளர் பிருந்தா, தொட்டியம் ஆய்வாளர் ஆனந்தி, தா.பேட்டை ஆய்வாளர் விஜய் பூபதி, முசிறி செயல் அலுவலர் வித்யா, அரசலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சஞ்சீவி, திருநாராயணபுரம் கோயில் கணக்கர் மனோகர் மற்றும் கோவில் அலுவலக உதவியாளர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறக்கும் போது ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொட்டியம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    Next Story
    ×