என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில்  முதியவரிடம் செல்போன்  பறித்த சிறுவன் கைது
    X

    திருச்சியில் முதியவரிடம் செல்போன் பறித்த சிறுவன் கைது

    • முதியவரிடம் செல்போன் பறித்த சிறுவன்
    • செல்போன் பறித்த சிறுவன் கைது


    திருச்சி


    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 71). இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் மேற்பார்வையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கலியமூர்த்தி திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிறுவன் உள்ளிட்ட உள்ளிட்ட 2 வாலிபர்கள் கலியமூர்த்தியை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.இது குறித்து கலியமூர்த்தி கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி ஆயில் மில் பகுதியை சேர்ந்த அருண் (19) திடீர்நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.




    Next Story
    ×