என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    துறையூர் அருகே மனைவி பிரிந்த சோகத்தில் ஐ.டி. ஊழியர் தற்கொலை
    X

    துறையூர் அருகே மனைவி பிரிந்த சோகத்தில் ஐ.டி. ஊழியர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துறையூர் அருகே மனைவி பிரிந்த சோகத்தில் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தேவாங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சரண்யா (32) என்கிற மனைவியும், புவன் (4) என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக அருண் பிரசாத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவியை பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் மறுத்து வந்துள்ளார்.

    இதனால் மிகுந்த சோகத்துடன் இருந்த அருண் பிரசாத் வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதற்கிடையே வீட்டில் இருந்த தனது பெற்றோரிடம் தான் விஷம் குடித்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அருண்பிரசாத்தின் பெற்றோர் சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருண் பிரசாத்தை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக அருண்பிரசாத்தின் தாய் காமாட்சி (60) துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×