என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
    X

    புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

    • புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
    • முசிறி நகராட்சி வளாகத்தில் நடந்தது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் புதிய அலுவலகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார், நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினர். நகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தில் தரைதளத்தில் 6860 சதுர அடியில் ஆணையர் அளவு, பொதுப் பிரிவு, வருவாய் பிரிவு, பொது சுகாதார பிரிவு, அலுவலகக் கூட்டம் அரங்கம், கணினி பிரிவு ஆகியவை கொண்டதாகவும் முதல் தளத்தில் 6400 சதுர அடியில் நகர் மன்ற தலைவர் அறை, பொறியாளர் அறை, பொரியர் பிரிவு, நகரமைப்பு பிரிவு, மற்றும் நில அளவை பிரிவு உட்பட ஆகிய அறைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் நகர செயலாளர் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் தாண்டவ மூர்த்தி (பொறுப்பு), தலைமை எழுத்தர் சேவியர், சுகாதார ஆய்வாளர் மலையப்பன், மேற்பார்வையாளர் சையது முகமது, நகர மன்ற ஊழியர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிரைவில் நகர் மன்ற துணைத் தலைவர் சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    Next Story
    ×