என் மலர்
உள்ளூர் செய்திகள்

919 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- திருச்சி புறநகர் மாவட்டத்தில் 919 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- பதட்டமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு
திருச்சி,
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் 919 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து இந்து அமைப்புகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.அப்போது அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் நிறுவவும், சரியான நேரத்தில் ஊர்வலத்தை நடத்தவும் அறிவுறுத்தினார்.மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் சிலைகளை நிறுவுவதற்கு மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டு கொண்டுள்ளார்.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துவரங்குறிச்சி, புத்தாநத்தம், தொட்டியம் அருகே உள்ள குளக்கொடி ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே மேற்கண்ட 3 இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புறநகர் பகுதிகளில் நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் ஊர்வலம் வருகிற 20 ம் தேதி நடைபெற உள்ளது.






