search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர் தூக்கும் உரிமை கேட்டு உண்ணாவிரத போராட்டம்
    X

    தேர் தூக்கும் உரிமை கேட்டு உண்ணாவிரத போராட்டம்

    • தொட்டியம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது
    • பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தபட்டிருந்தனர்

    முசிறி,

    தொட்டியம் ஸ்ரீ மதுர காளியம்மன் திருவிழாவில் சின்ன தேர் தூக்கும் உரிமையை வழங்க வேண்டும் என கோரிவட்டாட்சியர் அலுவலகம் முன்பு முத்தரையர் சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொட்டியம் அடுத்த கௌத்தரசநல்லூரில் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரைகாளியம்மன் திருவிழாவில் சின்ன தேர் தூக்கும் உரிமையை முத்தரையர் சமுதாயத்திடம் இருந்து சோழிய வெள்ளாளர் சமுதாயத்திற்கு ஒப்படைக்க முயற்சிப்பதாக முசிறி கோட்டாட்சியர், மதுரைகாளியம்மன் கோவில் நிர்வாக அலுவலர், தொட்டியம் வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தும், சின்னத் தேர் தூக்கும் உரிமையினை வழங்க கோரி எம் புத்தூர் சத்திரம் மேளக்காரக்காடு எலந்தமடை புதூர் தொட்டியபட்டி சுருட்ட பாளையம் தோளூர் பட்டி வெங்காய பட்டி காமலாபுரம் காமலாபுரம் புதூர் கார்த்திகைப்பட்டி கோட்டைமேடு அம்மன்குடி அப்பன நல்லூர் கொசவம்பட்டி சாலப்பட்டி அரங்கூர் கிழிஞ்ச நத்தம் கிருஷ்ணாபுரம் அயனா பட்டி உட்பட்ட 18 பட்டி கிராம முத்தரையர் சமுதாய மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பஉரிமை மீட்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை எனில் அரை நிர்வாண கோலத்தில் இருசக்கர வாகனம் மூலமாக மதுர காளியம்மன் கோவிலில் இருந்து சீனிவாசநல்லூர், மணமேடு, முசிறி, குளித்தலை, பெட்டவாய்த்தலை, சிறுகமணி,ஜியபுரம், சத்திரம்பேருந்து நிலையம் வழியாக திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நீதி கேட்டு மனு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தினால் தொட்டியம் பகுதியில் மிகுந்த பரபரப்பும், பதட்ட சூழ்நிலையும் உருவாகியுள்ளது, எவ்வித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×