search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி சாவு
    X

    மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி சாவு

    • புள்ளம்பாடியில் மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி பரிதாபமாக பலியானார்
    • கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

    டால்மியாபுரம்,

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் தெற்குதெருவில் வசித்து வரும் சின்னதுரை என்பவரின் மகன் ராமசுந்தரம் (வயது 32).விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது ஆடுகளுக்கு தழை வெட்ட சென்றார். இதற்காக வேப்பமரத்தில் ஏறி நின்று தழைகளை வெட்டி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தால். இதில் மரத்தின் கீழே உள்ள கருங்கலில் தலை மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் காட்டில் இருந்து வரப்பு வரை நகர்ந்து வந்து காட்டின் ஒரத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

    அவ்வழியாக ஆடுமேய்க்க சென்றவர்கள், இதனை கண்டு ஊருக்கு தகவல் கொடுத்தனர். ராமச்சுந்தரத்தின் மனைவி ஜெயசீலா தனது உறவினர்களுடன் சென்று கணவரை மீட்டு சமயபுரம்-இருங்களூர் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் ராமச்சந்திரத்தின் மனைவி ஜெயசீலா கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் லால்குடி இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் உள்ள ராமசந்திரத்தின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இறந்த ராமசுந்தரத்திற்கு ஜெயசீலா என்ற மனைவியும், தர்ஷனா (வயது 3), தன்விகா (வயது 1 1/2)என்ற 2 பெண் கைக்குழந்தைகள் உள்ளது.தீபாவளி திருநாளன்று தனது வயலுக்கு சென்று மரத்திலிருந்து கீழே விழுந்தவர் இறந்ததால் உறவினர் மட்டுமல்லாது பொதுமக்கள் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×