search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மத்திய சிறையில் உதவி போலீஸ் கமிஷனர் சோதனை - செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல்
    X

    திருச்சி மத்திய சிறையில் உதவி போலீஸ் கமிஷனர் சோதனை - செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல்

    • திருச்சி மத்திய சிறையில் கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.
    • சோதனையின் போது கைதிகளிடம் செல்போன்கள் சிம்கார்டுகள், போதைப் பொருட்கள் ஆயுதங்கள் இருக்கிறதா? என தேடினர்.

    திருச்சி :

    திருச்சி மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் இருந்து வருகின்றன. மேலும் அவ்வப்போது கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல்களும் நடக்கின்றன.

    இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தில் அப்பள்ளியை சூறையாடிய வழக்கில் கைதான 200-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கைதியிடமிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மத்திய சிறையில் சிறையில் அதிரடி சோதனை நடைபெற்றது. திருச்சி உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 போலீசார், 20 ஆயுதப்படை பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் காலை 6 மணிக்கு சோதனை தொடங்கியது.

    அவர்களுடன் சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் 80-க்கும் மேற்பட்ட சிைற காவலர்களும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கைதிகளிடம் செல்போன்கள் சிம்கார்டுகள், போதைப் பொருட்கள் ஆயுதங்கள் இருக்கிறதா? என சல்லடை போட்டு தேடினர். இதில் ஒரு செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய ஜெயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஜெயிலுக்குள் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    Next Story
    ×