என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அரியமங்கலம் கோடி அற்புதர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    அரியமங்கலம் கோடி அற்புதர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரவு 8 மணிக்கு திருவிழா விருந்து நடைபெறுகிறது.
    • தினமும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    திருச்சி,

    திருச்சி உள் அரியமங்கலத்தில் அமைந்துள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பின்னர் இரவு 8 மணிக்கு திருவிழா விருந்து நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தினமும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 17-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் 18-ந் தேதி திருப்பலி மற்றும் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ் மற்றும் இறை இசை பாடல் குழுவினர், அனைத்து அன்பியங்கள், ஆண்டனி பாய்ஸ், விருதுகள் நற்பணி மன்றம், வெள்ளாமை இயக்கம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், மகளிர் சுய உதவி குழுவினர், கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்துள்ளனர்.

    Next Story
    ×