என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு சைக்கிளை வீசி சென்ற மர்ம நபர்
- அதிவேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு சைக்கிளை வீசி சென்ற மர்ம நபர்
- சதி செயலா? என விசாரணை
திருச்சி,
சென்னை - மங்களூரூ எக்ஸ்பிரஸ் ரெயில் விருதாச்சலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர், சைக்கிளுடன் ரயில் பாதையை கடக்க வந்தார். வேகமாக வந்த ரயிலை கண்ட அந்த மர்ம நபர், தனது சைக்கிளை ரயில் பாதையில் போட்டு விட்டு தப்பி ஓடினார். ரயிலில் சிக்கிய சைக்கிள் சின்னா பின்னமானது. ரயில் இன்ஜினுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் இன்ஜினில் சைக்கிள் சிக்கியதை கண்டு லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். பின்னர் அவர் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். அங்கிருந்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அங்கு வந்த ஆர்பிஎப் வீரர்கள் சைக்கிளை அகற்றினர். சைக்கிள் முற்றிலுமாக அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் ரயில் என்ஜினை சோதித்தனர். சேதம் எதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், ரயில் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 21 நிமிடங்கள் ரயில் தாமதத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இது சதிச்செயலா? அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என்பது குறித்து ஆர்பிஎப், ரயில்வே போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடி வந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில், அதே ரயில் லால்குடி ஸ்டேஷன் அருகே வந்தபோது 10 மற்றும் 12-வது பெட்டியில் இருந்து புகை வந்தது. இதுகுறித்து ரயில் லோகோ பைலட்டுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து ரயில் ஸ்ரீரங்கம் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பழுது நீக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 41 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. பின்னர் திருச்சி ஜங்ஷனில் சைக்கிள் மோதிய இரண்டாவது கோச் நீக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 70 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். சைக்கிள் மீது ரயில் மோதிய விவகாரம் தொட ர்பாக விழுப்புரம் ரயில்வே போலீசார் ரயில்வே சட்டம் 147, 154 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்