என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் அரசு பெண் ஊழியர் உள்ளிட்ட 4 பேர் மாயம்
- திருச்சியில் அரசு பெண் ஊழியர் உள்ளிட்ட 4 பேர் மாயமானார்
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் சண்முகப்பிரியா (வயது 21). இவர் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் டைபிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது தந்தை தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் மாவட்டம் புவனகிரி சம்பந்தம் அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் துர்கா (வயது 18). இவர் திருச்சி கல்லூரியில் பி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று சொந்த ஊருக்கு செல்வதற்காக மத்திய பஸ் நிலையம் வந்த இவர் ஊருக்கு செல்லவில்லை. இதுகுறித்து அவரது சகோதரர் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பிராட்டியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் ஷோபனா. பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு காட்டன் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். உடல்நிலை சரியில்லாததால் திருச்சிக்கு பெற்றோரை பார்க்க வந்தார். வந்தவர் வீட்டுக்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பெயரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி தென்னூர் வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கிரிதரன் (வயது 20). திருச்சி திருவரங்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது தந்தை குமார் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






