என் மலர்
உள்ளூர் செய்திகள்

துறையூர் அருகே வாகன விபத்தில் 3 பேர் படுகாயம்
- துறையூர் அருகே வாகன விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
- வாகனத்தில் கொண்டு வந்த காளை மாடு பலி
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது47). இவர் கண்ணனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு தனது காரில் வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது காளிப்பட்டி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பவர் தனது கிராமத்தை சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர் வாங்கிய காளை மாட்டை பாடலூர் கிராமத்தில் இருந்து ஏற்றிக்கொண்டு காளிப்பட்டி நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில் இரு வாகனங்களும் துறையூர் பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த அசோக்குமார், சரக்கு வாகனத்தில் வந்த அஜித், வர்ஷன் (7) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள காளை மாடு பலியானது என்பது குறிப்பிடத்தக்கது.